1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Raiza opens up about her past reletionship

லிவிங்டூகெதரில் இருந்திருக்கீங்களா? யோசிக்காமல் பதில் சொன்ன ரைசா!

Raiza Wilson
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
 
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா தற்போது ரசிகர்ளின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் லிவிங்டூகெதரில் இருந்திருக்கீங்களா? என கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல், நான் ஒருவரை பல வருஷம் காதலித்து ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். நாங்கள் கடந்த 2016ல் பிரிந்துவிட்டோம் என கூலாக கூறினார். யார்..? யார் அந்த நபர்? ஏன் பிரிஞ்சுட்டீங்க? என ரசிகர்கள் ரைசாவை நச்சரித்து வருகின்றனர் . 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
சந்திரமுகி படத்தில் இவர் தான் நடிக்கவேண்டியது... ஜோதிகாவையே தூக்கி சாப்பிட்டிருப்பாங்க!