1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 13 மே 2021 (16:32 IST)

யார் செத்தா நமக்கு என்ன நமக்கு சோறு தான் முக்கியம் - ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
 
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டீவாக இருக்கும் ரைசா இந்த கொரோனா காலத்தில் உயிர் இழப்புகள் அதிகரித்து வரும் நேரத்தில் எதை பற்றியும் கவலை படாமல் ட்விட்டரில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணியை விட சிறந்தது என கூறி பதிவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டியுள்ளார்.