ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 மே 2021 (13:27 IST)

சைஸா மாறுன ரைசா மூஞ்சி இப்போ நைஸா ஆகிடுச்சே - ரீசன்ட் பிக்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.அண்மையில் பியூட்டீஷியன் ஒருவர் தன்னை வற்புறுத்தி அழகுபடுத்துறேன் என கூறி முகத்தை சிதைத்து விட்டதாக கூறி சர்ச்சை கிளப்பினார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் தன் முக அழகை பெற்று மொழு மொழுன்னு போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். அழகு கொஞ்சம் ஓவரா ஆகிச்சு போல என கூறி இன்ஸ்டாவாசிகளின் ரசனையில்  மூழ்கியுள்ளார்.