1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. gatta kusthi 2 team revealed the three days collection

100 கோடி வந்தா சந்தோஷம்.. விஷ்ணு விஷால் ஹேப்பி.. கட்டா குஸ்தி 2 மூணு நாள் வசூல் இதுதான்!...

gatta kusthi2
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் ஏற்கனவே வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய செல்ல அய்யாவு இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் கடந்து வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இந்த படத்தை தியேட்டரில் போய் பலரும் பார்க்கிறார்கள்..

இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட படக்குழு தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து புரமோஷன் செய்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் இந்த படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படம் வெளியாகிய மூன்று நாளாகிவிட்ட நிலையில் இந்த படம் 22 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இது பற்றி செய்தியாளிடம் பேசிய விஷ்ணு விஷால் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.. அப்போது ‘படம் 100 கோடி அடிக்குமா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு ‘100 கோடி வந்தால் சந்தோஷம்தான்.. ஆனால் அதில் பாதியை தாண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என்று விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
பாவா லட்சுமணனுக்கு ஒரு லட்சம்.. மாசம் 10 ஆயிரம்!.. ரஜினி உதவி!...