1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sigma release date may postpone as vijay movie

அதே தேதியில் அப்பா படம் ரிலீஸ்!.. சிக்மா ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?!...

sigma
முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆன அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. எனவே அப்போது படம் வெளியாகவில்லை..

எனவே தயாரிப்பாளர் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தார். அது நடந்து நான்கு மாதங்கள் ஆகியும் இப்போது வரை படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும் என தெரிகிறது. இந்நிலையில், 23ம் தேதி படத்தை வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கிறார். ஒருவேளை அது நடக்காமல் போனால் ஜூலை 31ம் தேதி இந்த படம் வெளியாகும் என்கிறார்கள்..

ஆனால் அதே தேதியில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படமும். லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்ததுள்ள DC படமும் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். எனவே ஜனநாயகன் படம் 31ம் தேதி வந்தால் இந்த இரண்டு படங்களின் ரிலீஸும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.