1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. mansoor alikhan request to ajith to come to cinema

சினிமாவை காப்பாத்த நடிக்க வாங்க அஜித்!.. மன்சூர் அலிகான் கோரிக்கை!...

ajithkumar
நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அவரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது வரை அவர்களின் புதிய படம் துவங்கப்படவில்லை.. அவர் 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை.

அஜித்தும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில்தான், ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் அஜித்தை சினிமாவில் நடிக்க வருமாறு அஜித்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ‘உங்களை அடையாளம் கண்டது சினிமா.. உங்களுக்காக ரசிகர்களை உருவாக்கியது சினிமாதான்.. விஜய் முதல்வராகிவிட்டார். நீங்கள் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறீர்கள்.

அந்த விளையாட்டு மிகவும் ரிஸ்க்.. உயிரை பணயம் வைக்கும் கார் ரேஸ்தான் பேஷன் என்று நீங்கள் இருக்கிறீர்கள்.. தயவு செய்து லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை தரும் திரைத்துறையை மனதில் நினைத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த சினிமாவுக்கு வாருங்கள்.. 10 தயாரிப்பாளர்களை சேர்ந்து தயாரிக்க வைத்து படத்தை எடுக்கலாம்.. இரு கரம் கூப்பி உங்களை வரவேற்கிறேன்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அதே தேதியில் அப்பா படம் ரிலீஸ்!.. சிக்மா ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?!...