தொடர்புடைய செய்திகள்
- அப்படியே அதே ஃபோன்தான்.. இந்த ஒரு சிறப்பம்சம் மட்டும் கூடுதல்! – Redmi 12 5G எப்படி இருக்கு?
- சிம்பிளா.. ஸ்டைலா.. பட்ஜெட் விலையில்.. ஆனா?! – OPPO A58 சிறப்பம்சங்கள் என்ன?
- வயர் கனெக்சன் தேவையில்ல.. வெளியானது Airtel Xstream AirFiber 5G! – என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
- சக்கை போடு போடும் Lava Blaze 5G! – கூடுதல் சிறப்பம்சங்களை அப்டேட் செய்த லாவா!
- தொடங்கியது Amazon Great Freedom Festival Sale! – எந்தெந்த பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும்?
பேருதான் வேற.. ஸ்டைல், கேமரா எல்லாம் ஒரே மாதிரி..! – POCO M6 Pro Vs Redmi 12 5G!
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள POCO M6 Pro 5G ஸ்மார்ட்போன் மற்றும் Redmi 12 5G கிட்டத்தட்ட ஒரே சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களாக வெளியாகியுள்ளன.
POCO M6 Pro 5G மற்றும் Redmi 12 5G இரு மாடல்களுமே ஸ்னாப்ட்ராகன் 4 Gen 2 சிப்செட்டில் செயல்படுகின்றன. இரண்டிலுமே 50 எம்பி டூவல் பிரைமரி கேமராவும், 8 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது. 5000 mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சிறப்பம்சங்கள் இரண்டு மாடல்களிலுமே உள்ளன.
POCO M6 Pro 5G மற்றும் Redmi 12 5G இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்டைலும் கேமராவும் கூட ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. ஆனால் ரேம் மற்றும் இண்டெர்னல் ஸ்டோரேஜ் பொறுத்து இரண்டு மாடல்களும் அதன் விலைகளும் மாறுபடுகின்றன.
POCO M6 Pro 5G ஸ்மார்ட்போன் 4GB + 64GB வேரியண்ட் ரூ.10,999-க்கும், 6GB + 128GB வேரியண்ட் ரூ.12,999-க்கும் விற்பனையாகிறது. Redmi 12 5G ஸ்மார்ட்போன் 4GB + 128GB வேரியண்ட் ரூ.11,999-க்கும், 6GB + 128GB வேரியண்ட் ரூ.13,499-க்கும், 8GB + 256GB வேரியண்ட் ரூ.15,499-க்கும் விற்பனையாகிறது. விலை பொறுத்தவரை ரெட்மியை விட போக்கோவில் ஒரே சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் ரூ.1000 வரை விலை குறைவாக உள்ளது.
Edit by Prasanth.K
