பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 345 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 505 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 86 புள்ளிகள் சார்ந்து 19,485 என்ற பகுதிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை தொடர்ச்சியாக அதிகரிக்கவே வாய்ப்புகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Edited by Siva