வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:01 IST)

சக்கை போடு போடும் Lava Blaze 5G! – கூடுதல் சிறப்பம்சங்களை அப்டேட் செய்த லாவா!

Lava Blaze 5G
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா அறிமுகப்படுத்திய Lava Blaze 5G சிறப்பாக விற்பனையாகி வருவதால் இந்த மாடலில் கூடுதல் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.



இந்தியா முழுவதும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் லாவா நிறுவனமும் தனது புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பம்சங்கள் + 5ஜி தொழில்நுட்பத்துடன் குறைந்த விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

முன்னதாக 4 ஜிபி, 6 ஜிபி ரேம் வேரியண்டுகளில் வெளியாகியிருந்த இந்த ஸ்மார்ட்போனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் அடுத்து இதே மாடலில் 8 ஜிபி ரேம் வேரியண்டில் புதிய ஸ்மார்ட்போனையும் லாவா அறிமுகம் செய்துள்ளது.

Lava Blaze 5G சிறப்பம்சங்கள்:
  • 6.5 இன்ச் 1600x720 பிக்சல் 2.5D வளைந்த ஸ்கிரீன்,
  • ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
  • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + 3 ஜிபி / 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி மெமரி, 1 TB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 12
  • 50 MP + 2 MP + VGA ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • டெப்த் கேமரா, மேக்ரோ கேமரா, எல்இடி பிளாஷ்
  • 8 MP செல்பி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி
  • 15W பாஸ்ட் சார்ஜிங்
 
இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் க்ளாஸ் ப்ளூ மற்றும் க்ளாஸ் க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் புதிய 8 ஜிபி வேரியண்ட் மாடல் சிறப்பு அறிமுக சலுகை விலையாக ரூ.12,999க்கு விற்பனையாகிறது.

Edit by Prasanth.K