ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (09:08 IST)

தொடங்கியது Amazon Great Freedom Festival Sale! – எந்தெந்த பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும்?

Great Freedom Sale
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் தனது Amazon Great Freedom Festival Sale ஐ இன்று முதல் தொடங்கியுள்ளது.

 
சுதந்திர தினம் வரும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் Festival Sale ஐ வருடந்தோடும் நடத்துகின்றன. அந்த வகையில் இன்று ஆகஸ்டு 4 முதல் 8ம் தேதி வரை அமேசான் தனது Amazon Great Freedom Festival Sale 2023ஐ நடத்துகிறது. இதில் பல பொருட்கள் 50% வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன.
 
சிறப்பான எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் சில உங்கள் பார்வைக்கு..
 
Lenovo IdeaPad Gaming 3 Laptop இன்று 38% ஆஃபரில் ரூ.50,990க்கு கிடைக்கிறது. 8ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த லேப்டாப் இண்டெல் கோர் 11வது தலைமுறை சிப்செட்டில் இயங்குகிறது.
 
Sony Bravia (65 inches) 4K Ultra HD LED Google TV இன்று 47% ஆஃபரில் ரூ.73,990க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவி விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் சோனி நிறுவனமும் ஒன்று. இந்த Sony Bravia (65 inches) 4K Ultra HD LED Google TV 3 HDMI Port, 2 USB Port, 20W ஸ்பீக்கர் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
 
Samsung 7Kg Top Loading Washing machine இன்று சிறப்பு தள்ளுபடியில் 25% கழிவுடன் ரூ.15,790க்கு கிடைக்கிறது. boat Aavante Bar 3200D Soundbar with Dolby Audio இன்று சிறப்பு விற்பனையாக 62% தள்ளுபடி போக ரூ.14,998க்கு விற்பனையாகிறது.

Great Freedom Sale
 
அமேசான் தயாரிப்புகளான Echo dot, Fire TV Stick, Kindle Device, Echo Buds போன்றவை மீது 56% வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்மார்ட்வாட்ச்கள் மீது 87% வரை தள்ளுபடி உள்ளது. ஸ்மார்ட்வாட்ச்கள் ஆரம்ப விலையாக ரூ.899ல் இருந்தே பல மாடல்கள் விற்பனையில் உள்ளன.
 
iPhone 14 (128 GB) மிக குறைந்த விலையாக 16% தள்ளுபடியுடன் இன்று ரூ.66,99க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
இவை தவிர ஸ்மார்ட்போன் ரகங்களில் Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன்களுக்கு 64% வரை தள்ளுபடி உள்ளது. மேலும் பல ஸ்மார்ட்போன்களுக்கும் டெபிட், கிரெடிட் கார்டுகளில் பல விலை குறைப்பு ஆஃபர்கள் உள்ளன. EMI வசதியும் உள்ளது.