அதிகரிக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.. கூகுள் பிளே ஸ்டோரின் புதிய விதிகள்..
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் போன்ற பெரிய திரை சாதனங்களில் செயலிகளின் பயன்பாட்டை மேம்படுத்த கூகுள் பிளே ஸ்டோர் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
இதன்படி, வரும் ஏப்ரல் 2027 முதல் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து செயலிகளும் எனப்படும் மூன்றாம் நிலை வடிவமைப்பு தரத்தை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத செயலிகளுக்கு புதிய அப்டேட்கள் அனுமதிக்கப்படாது என்பதோடு, பிளே ஸ்டோரில் அவற்றின் தெரிவுநிலையும் குறைக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, சாதனத்தை மடிக்கும்போதோ, விரிக்கும்போதோ அல்லது சுழற்றும்போதோ திரை இடத்தை சரியாக பயன்படுத்துவதுடன், பயனர்கள் பார்த்துக்கொண்டிருந்த இடத்தையும் தட்டச்சு செய்த தகவல்களையும், மீடியா பிளேபேக்கையும் செயலிகள் தடையின்றி தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மேலும், டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனங்களின் உள் மற்றும் வெளித் திரைகளில் செயலி எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதைக் காட்டும் வகையில் 3 பிரத்யேக ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவேற்ற வேண்டும்.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2027 முதல் அனைத்துப் புதிய செயலிகளும் அப்டேட்களும் ஆண்ட்ராய்டு 17 இலக்கைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்துத் திரைகளிலும் செயலிகள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ய கூகுள் இந்த அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

