டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி: பேட்டிங் செய்யும் கொல்கத்தா

t
Last Modified புதன், 23 மே 2018 (18:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
ஈடன் கார்டன் மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணியுடன் மோதும். இதுவரை கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் எந்தவொரு ஐபிஎல் பிளே-ஆப் சுற்றிலும் நேருக்கு நேர் மோதியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :