தனி ஒருவனாய் சென்னை வெற்றிக்கு போராடிய டுபிளஸ்சிஸ்

Last Modified செவ்வாய், 22 மே 2018 (22:50 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்றைய போட்டியில் 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சென்னை அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை 62 ரன்களுக்கு பறிகொடுத்து தத்தளித்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டுபிளஸ்சிஸ் தனி ஒருவனாக போராடி வெற்றிக்கு வித்திட்டார். அவர் 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னையை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் சென்னை அணி வரும் 27ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :