1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
  4. Harbhajan Singh tweets about victory against Hyderabad

மெரினாவை வென்ற கூட்டம், கோப்பையை வெல்லாமலா... ஹர்பஜன் ட்விட்!

ஐபிஎல் 2018
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
நேற்றைய போட்டியில், 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கங்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
 
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டுபிளஸ்சிஸ் தனி ஒருவனாக போராடி சென்ன அணியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் பின்னர் அணியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட் பின்வருமாறு...
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்: 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் சென்னை!