1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (11:20 IST)

பிளே-ஆப் வெளியேற்றுதல் சுற்று: கொல்கத்தா- ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
 
ஐபிஎல் லீக் போட்டிகளில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்து கொல்கத்தா(16 புள்ளி) மற்றும் ராஜஸ்தான் (14 புள்ளி) அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.  
 
இந்நிலையில், இன்று இன்று 7.00 மணிக்கு ஈடன் கார்டன் மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணியுடன் மோதும்.
 
கொல்கத்தா- ராஜஸ்தான் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.