புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : புதன், 23 மே 2018 (16:29 IST)

ஐபிஎல்: 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் சென்னை!

ஐபிஎல் பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கபடும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 6 முறை இறிதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றின் தகுதி போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை பெற்றுள்ளது. இதுவரை சென்னை அணி 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றது.
 
இதில் 2010ம் ஆண்டில் மும்பைக்கு எதிரான போட்டியிலும், 2011ம் ஆண்டில் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.