அனுபவத்தை காட்டிவிட்டது சிஎஸ்கே: கேன் வில்லியம்சன் புகழாரம்!

Last Updated: திங்கள், 28 மே 2018 (16:21 IST)
2018 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் ஐதராபாத் அணி நான்கு முறை மோதி நான்கு முறையும் தோல்வி அடைந்துள்ளது.
 
இந்நிலையில் சிஎஸ்கேவின் வெற்றி குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியது பின்வருமாறு. இது இந்த ஆட்டத்தின் இயற்கை. சில வேளைகளில் எதிரணியினரின் நல்ல கிரிக்கெட்டை கைதட்டி வரவேற்க வேண்டியதுதான். 
 
தனித்துவமான பேட்டிங், அவர்கள் வாய்ப்புகளையே வழங்கவில்லை. எங்கள் கைகளில் அடிப்பதை விட தூக்கி பவுண்டரிக்கு வெளியே அடித்தனர். நெருக்கமான தருணங்களை சிஎஸ்கே சிறப்பாகக் கையாண்டதால் வெற்றி பெற்றது. 
 
இதற்காக அந்த அணியைப் பாராட்டவே வேண்டும். நெருக்கடியைப் புறந்தள்ளி பேட்டிங்கில் நிரூப்பித்தனர். பிட்ச் 180 ரன்களை சிறப்பாக தடுத்து விடும் என்றே நினைத்தோம். முதல் 6 ஓவர்கள் அவர்களால் அடிக்க முடியவில்லை, ஆனால் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆவது நின்ற உடன் ஷேன் வாட்சன் புகுந்தார். அவரை நிறுத்த முடியவில்லை.
 
இந்தத் தொடர் முழுதுமே நடுவில் 2 விக்கெட்டுகள் எதிரணியினரை நிலைகுலையச் செய்யுமாறு ஆடினோம், ஆனால் இந்தப் போட்டியில் அது நடக்கவில்லை. தங்களது அனுபவத்தை காட்டிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :