யூசுப் பதான் அதிரடியில் சென்னைக்கு 179 ரன்கள் இலக்கு

Yusuf Pathan
Last Updated: ஞாயிறு, 27 மே 2018 (20:52 IST)
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. 
 
அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது. வில்லியம்சன் நிதிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். பின்னர் களமிறங்கிய யூசுப் பதான் அதிரடியாக விளையாடி 150 ரன்கள் கடக்க உதவியாய் அமைந்தார்.
 
கடைசி நேரத்தில் கார்லோஸ் பிராத்வெய்ட் அதிரடியாக விளையாடினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து சென்னை அணி 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :