வில்லியம்சனா? தோனியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

<a class=SRH vs CSK" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-05/27/full/1527417947-4707.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: ஞாயிறு, 27 மே 2018 (16:15 IST)
இன்று நடைபெற உள்ள தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் கேன் விலியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் விளையாட உள்ளது. இந்த சீசனில் அயல்நாட்டு வீரரை கேப்டனாக கொண்ட ஒரே அணி ஹைதரபாத் அணிதான்.
 
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்தவர். ஹைதராபாத் அணி பவுலிங் ஒன்றே வைத்தே இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. 
 
இதுவரை சென்னை அணியுடன் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி பேட்டிங்கில் பலமாக உள்ளது. இதனால் எவ்வளவு இலக்காக இருந்தாலும் எளிதில் சேஸிங் செய்து வெற்றி பெற்று விடுகிறது.
 
இந்த காரணத்தில் இன்று நடைபெறும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :