இன்று சென்னை வருகிறது ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே அணி

Last Modified திங்கள், 28 மே 2018 (07:33 IST)
11வது ஐபிஎல் போட்டிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஏற்கனவே கடந்த 2010, 2011 என இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்த அணி தற்போது மூன்றாவது முறையாகவும் சாம்பியன் ஆகியுள்ளது.
இந்த நிலையில் இன்று வெற்றி கோப்பையுடன் சென்னை அணியின் அனைத்து வீரர்களும் சென்னை வரவுள்ளனர். இதனை இந்த அணியின் கேப்டன் தோனி உறுதி செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் போட்டியில் இணைந்த சென்னை அணி, சொந்த மண்ணில் விளையாட முடியாத நிலையில் தற்போது வெற்றிக்கோப்பையுடன் சென்னை வரவுள்ளது சென்னை ஐபிஎல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை வரவுள்ள சிஎஸ்கே அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இன்று சென்னை வீரர்கள் கோப்பையுடன் வலம் வருவார்கள் என்றும், சென்னை அணியின் கேப்டன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதுஇதில் மேலும் படிக்கவும் :