வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 மே 2018 (22:47 IST)

வாட்சன் அதிரடி சதம்: 3வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் ஷேன் வாட்ஸன் அதிரடியாக 117 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால்
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. இதனால் முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தானர். 
 
இந்த நிலையில் வெற்றி பெற 179 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 181 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் மிக அபாரமாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும், அடங்கும். மேலும் சுரேஷ் ரைனா 32 ரன்கள் எடுத்தார். 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது