1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thiruvannamali deepam festival compair last years

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்.. தீபத்திருவிழா நுழைவுச்சீட்டு ஒப்பீடு!...

thiruvannamalai
உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 12ஆம் தேதி துவங்கியது. வருகிற 28ஆம் தேதி வரை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

வருகிற 24-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படவிருக்கிறது. மகா தீபத்தை நேரில் ரசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா நுழைவுச்சீட்டு தொடர்பாக கடந்தாண்டை, இந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது..

கடந்த வருடம் பரணி தீபம் நுழைவுச்சீட்டு கட்டணம் ரூ.500-ஆக இருந்த நிலையில், இந்த வருடம் நுழைவுச்சீட்டு கட்டணம் இல்லை.

கடந்த வருடம் மகா தீபம் நுழைவுச்சீட்டு கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில்,  தற்போது கட்டணம் இல்லை.

கடந்த வருடம் உள்ளூர் பக்தர்களுக்கு நுழைவு சீட்டுகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வருடம் உள்ளூர் பக்தர்கள் 1500 பேருக்குள் நுழைவு சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வரும் இணையதளம் வாயிலாக 1600 நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் 3,000 நுழைவுச் சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்!.. BSNL புதிய பிளான் அறிமுகம்...