1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. the odyssey move three days collection

3 நாட்களில் ரூ.2554 கோடி வசூல்!. பாக்ஸ் ஆபிசில் கலக்கும் The Odyssey!...

the odyssey
ஹாலிவுட்டில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். Momento, The Prestige, Batman Begins, The Dark Knight, Intersteller, Inception போன்ற முக்கிய திரைப்படங்களை இயக்கிய ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.

இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் கூட இவரின் படங்களை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் Inception மற்றும் Intersteller ஆகிய படங்கள் உலக அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில்தான், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த The Odyssey திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது..

3 ஆயிரம் வருடம் வருடங்களுக்கு முந்தைய கிரேக்க இதிகாசமாக கருதப்படும் Odyssey நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்தார். ஒரு போர் வீரனின் 10 வருட பயணமாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிம ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.2554 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இது கிறிஸ்டோபர் நோனலின் முந்தைய படமான ஓப்பன் ஹெய்மரின் ஓபனிங் வசூலை முறியடித்திருக்கிறது. படத்தின் தயாரிப்பு செலவை தாண்டியும் இந்த படம் வசூல் வேட்டை நடத்தும் எனக் கணிக்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் மாஸா இருக்கும்!.. வந்து பாருங்க!.. ஹெச்.வினோத் பேட்டி!...