1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
  4. spiderman brand new day first dy collection in india

வசூலில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சாதனயை முறியடித்த ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே!..

spider man
ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்பைடர் மேன் திரைப்படங்களை குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அதனால்தான் கடந்த பல வருடங்களாகவே தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன்  திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் பல மொழிகளிலும் இந்த படங்கள் டப் செய்யப்பட்டு வருகிறது. அப்படி நேற்று வெளியான திரைப்படம்தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

நேற்று வெளியான இந்த திரைப்படம் இந்தியாவில் ஒரே நாளில் ரூ.72.44 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன்மூலம் இதுவரை முதல் இடத்தில் இருந்த அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் சாதனையை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. இந்தியாவில் வெளியன ஹாலிவுட் படத்தின் மிகப்பெரிய முதல் நாள் வசூல் என்ற புதிய சாதனையை இந்த படம் பெற்றுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கேங்ஸ்டராக லோகேஷ் கனகராஜ்!.. இரத்தம் தெறிக்கும் DC டிரெய்லர் வீடியோ!..