1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Cockroach Party Will Not Contest Uttar Pradesh Elections, Says Founder Abhijit Dipke

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

உத்தரப் பிரதேசத் தேர்தல்
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது என்றும், எந்தவொரு கட்சிக்கும் தங்களது ஆதரவு இல்லை என்றும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது கட்சி தேர்தல் களத்தில் இறங்க போவதில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
 
403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா கூட்டணியில் சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஆளும் பாஜகவும் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கத் தயாராகி வருகிறது.
 
இந்த சூழலில் பேசிய அபிஜீத் தீப்கே, தேர்தல்கள் இளைஞர்களை மையப்படுத்தி நடைபெற வேண்டும் என்றும், சாதி மற்றும் மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
 
இன்னும் எத்தனை காலம் சாதி, மத அடிப்படையில் அரசியலும் தேர்தலும் நடக்கும் என கேள்வி எழுப்பிய அவர், உலகம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்...