1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump want to increase the tax to india

ஒத்துக்கிட்டா இவ்ளோ.. இல்லனா இவ்ளோ வரி!.. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்...

modi trump
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால் பல காரணங்களால் அவரால் அதை செய்ய முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வதி வரிப்பேன் என மிரட்டினார். ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என கண்டிஷன் போட்டார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது. எனவே அவர் அமைதியாக விடுவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் வரி விதிப்பை கையில் எடுத்திருக்கிறார்..

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் விதிக்க அமெரிக்க டொனால்ட் நிர்வாகம் முன்மொழிந்திருக்கிறது. அதேநேரம், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்த வரி 17 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதேநேரம் இது இன்னும் இறுதி முடிவாக அறிவிக்கப்படவில்லை. பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. சீனாவுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மேசேஜ் அனுப்பு நேரம் குறிக்கலாம்!.. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்...