1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk head planing to keep mlas in the hotel

அதிருப்தியில் தவெக எம்.எல்.ஏக்கள்.. ஹோட்டலிலேயே தங்க வைக்க தவெக முடிவு?..

cm vijay
துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆகியோர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த கூட்டத்திற்கு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தலைமை வகிக்கவுள்ளார். மேலும், அமைச்சர்கள் ஆனந்த், ராஜ் மோகன், ஆதாவ் அர்ஜனா, செங்கோட்டையன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்க முதல்வர் விஜய் ஆலோசனையை நடத்தவுள்ளார். மேலும்,. எம்.எல்.ஏக்களை அவர் எச்சரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது..

மேலும் விஜயுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தவெக எம்.எல்.ஏக்களை நட்சத்திர விடுதியிலேயே இன்று இரவு தங்க வைக்கும் எண்ணம் இருக்கிறதாம். எனவே, கூட்டம் முடிந்த பிறகு யாரும் வீட்டிற்கு செல்லக்கூடாது.. இங்கேயே தங்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

கூட்டம் நடைபெறும் நட்சத்திர ஹோட்டல் மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது..

தவெக எம்.எல்.ஏக்களில் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை விடுதியிலேயே தங்க வைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளனராம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் அயன் கோட்!.. டிரம்புக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு...