ரவி சங்கருக்கு துணை சபாநாயகர் பதவி பறிபோகிறதா?.. நடப்பது என்ன?..
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் பிரச்சனை காரணமாக புகாரளிக்க வந்த நபரை அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது. மேலும் போலீசாரின் உதவியோடு அவரை மிரட்டி வீடியோ பேச வைத்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் புகார் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளனர். ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்..
இந்நிலையில்தான், துணை சபாநாயகர் ரவி சங்கரின் பதவியை பறிக்க தவெக தலைமை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இடைக்கால சபாநாயகராக இருந்த சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து பேசியிருக்கிறார். எனவே எம்.எல்.ஏ கருப்பையா துணை சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.