இன்று டெல்லி செல்லும் முதல்வர் விஜய்!.. யாருடனெல்லாம் மீட்டிங்?...
மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று மதியம் 12:30 மணியளவில் டெல்லி செல்லும் விஜய் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சனைகள் பற்றி பேசவிருக்கிறார்.
அதன்பின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ் இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று மாலை டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா என்கிற நட்சத்திர ஓட்டலில் நடைபெறவிருக்கிறது..

