1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Today gold and silver rate at chennai

சிறிய அளவில் ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 40 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,700 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 53,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 96.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 96,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தையில் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!