வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (13:07 IST)

சென்னை அருகே மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் - 4 பேர் கைது

சென்னையை அடுத்த செங்குன்றம், வடபெரும்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையை அடுத்த செங்குன்றம், வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் கெமிகல் குடோனில் சோதனை நடத்தியபோது மெத்தனால் கலவையுடன் இருந்த 1500 லிட்டர் ரசாயனம் சிக்கியது. இதனையடுத்து கொருக்குப்பேட்டை கவுதம், மலையனுர் பரமசிவம், மாதவரம் பென்சிலால், ராம்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
மேலும் இந்த நான்கு பேர்களுக்கும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிக்கிய மாதேஷ்க்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை வருகிறது.
 
Edited by Siva