வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூன் 2024 (13:22 IST)

தேர்வில் தோல்வி.. தாயையும் தம்பியையும் கொலை செய்த கல்லூரி மாணவர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

கல்லூரி தேர்வில் தோல்வியடைந்ததால் கண்டித்த தாயையும் கேலி செய்த தம்பியையும் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை திருவொற்றியூர் பகுதியில் முருகன் மற்றும் பத்மாவதி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பத்மாவதி தனியார் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டே மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
 
இந்த நிலையில் மூத்த மகன் நித்திஷ் கல்லூரி தேர்வில் 14 பாடங்களில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது தாயார் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்திஷ், தன்னை கண்டித்த தாய் மற்றும் தாய் கண்டிக்கும்போது கேலி செய்த தம்பி ஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தபோது நித்திஷை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தாயையும் தம்பியையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
பெற்ற தாய் மற்றும் உடன் பிறந்த தம்பியை கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva