ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (10:54 IST)

சென்னை மெரீனாவில் திடீர் பாதுகாப்பு.. ஜல்லிக்கட்டு போல் மீண்டும் ஒரு போராட்டமா?

சென்னை மெரினாவில் திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என்பதும் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை செய்துள்ள நிலையில் இன்று திடீரென மெரினாவில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மெரினாவில் ஒரு சிலர் கூட இருப்பதாக கூறப்படும் நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 
மெரினாவில் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டு அது பிரச்சினையை உருவாக்க கூடாது என்பதற்காக முன்கூட்டியே தற்போது போலீசார் சுதாரித்து மெரினாவுக்கு வருபவர்களை விசாரணை செய்து வருவதாகவும் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
மேலும் யாராவது போராட்டம் நடத்தினால் உடனடியாக அவர்களை கலைக்கவும் கைது செய்யவும் போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran