பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?.. முதல்வர் விஜய் இன்று ஆலோசனை...
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தை பொறுத்து தமிழக அரசு பள்ளிகளை எப்போது திறக்குது என்பது பற்றி முடிவு எடுக்கும்.
இந்த வருடத்தை பொறுத்தவரை வருகிற ஜூன் 1ம் தேதி திங்களன்று தமிழ்நாடு முழுதும் 4ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை வரும் 4ஆம் தேதி பள்ளிகளை திறக்க ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
ஆனால், தமிழ்நாட்டில் கோடை வெயில் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, கோடை வெயில் தொடர்பாக வானிலை அறிக்கையை நேற்று பள்ளிக்கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
வானிலை அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதலமைச்சர் விஜயின் ஆலோசனையை தொடர்ந்து கோடை விடுமுறையை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.