குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராம்: ஆபாச புகைப்படங்கள்; ரசிகர்கள் அதிர்ச்சி!

Last Updated: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (15:33 IST)
சுசிலீக்ஸ் திரையுலகில் புயலை கிளப்பியது போல, தற்போது விளையாட்டு துறையிலும் சர்ச்சை துவங்கியுள்ளது. ஆம், குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
ஆனால், உண்மையில் குல்தீப் யாதவ்வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடந்த இந்த மோசமான சம்பவத்திற்காக குல்தீப் யாதவ் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். 
 
இதேபோல சில தினங்களுக்கு முன்னர் அபினவ் பிந்த்ராவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு, இதேபோல் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :