ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (13:34 IST)

சென்னையில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன் கைது

சென்னை மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தை அடுத்த மணமையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.  விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள், குளிக்கும் போது அதே கல்லூரியில் பயிலும் ஆந்திராவை சேர்ந்த மாணவன் திருட்டுத்தனமாக தனது செல்போனில் படமெடுத்துள்ளான்.
 
இதனையடுத்து மாணவிகள் நடந்த சம்பவத்தைப் பற்றி விடுதி வார்டனிடம் கூறியுள்ளனர். தாம் மாட்டிக் கொண்டோம் என்பதையறிந்த மாணவன் கல்லூரியில் இருந்து தப்பித்து சென்றுள்ளான். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் காணாமல் போன மாணவனை கைது செய்த போலீஸார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப் புகாரில் சிக்கிய மாணவனை, தனியார் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.