மனிஷ்பாண்டேவை கண்டபடி திட்டிய தல தோனி(வைரலாகும் வீடியோ காட்சி)

dhoni
Last Updated: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (15:16 IST)
செஞ்சுரியனில் நடைபெற்ற இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மனிஷ் பாண்டேவை தோனி திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தீர்மானித்ததால் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 2-வது ரன் ஓடாமல் மனீஷ்பாண்டே பந்தை கவனித்தபடி மெல்லமாக ஓடினார். இதனால் எதிர்முனையில் இருந்த தோனி கடுப்பாகி அங்கே என்ன பார்த்துட்டே இருக்க? இங்க பாரு. கவனமாக இரு என்று மணீஷ்பாண்டேவை பார்த்து கோபமாக கூறினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு  189 ரன்கள் எடுத்து  இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

Video Courtesy: SONY LIVE


இதில் மேலும் படிக்கவும் :