1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (22:27 IST)

ஃபேஸ்புக் ஓனர் மார்க்கை ஒரே வாரத்தில் முந்திய ப்ரியா வாரியர்

கடந்த சில நாட்களாக ப்ரியா வாரியரின் ஒரே ஒரு கண்சிமிட்டல் இந்திய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது என்று கூறலாம். ஒரு திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற ஒரே ஒரு காட்சியால் உலகப்புகழ் பெற்றவரை இதுவரை திரையுலகம் கண்டதில்லை
 
ஏற்கனவே கூகுள் தேடுதளத்தில் சன்னிலியோன் உள்பட முக்கிய பாலிவுட் பிரபலங்களை முந்திய ப்ரியாவாரியர் தற்போது ஃபேஸ்புக் ஓனர் மார்க்ஜுகர்பெர்கையும் முந்திவிட்டார்
 
ஆம், இன்ஸ்டாகிராம் சமூல வலைத்தள பக்கத்தில் மார்க் ஜுகர்பெர்கைக்  அவர்களுக்கு இருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை காட்டிலும், ப்ரியாவாரியருக்கு ஃபாலோயர்கள் அதிகமாம்,. மார்க் ஜுகர்பெர்கைக் அவர்களுக்கு 40 லட்சம் ஃபாலோயர்களே இன்ஸ்டாகிராமில் இருக்கும் நிலையில் ப்ரியாவாரியருக்கு 45 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இன்னும் மிக வேகமாக ஃபாலோயர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால் இன்னும் எத்தனை சாதனைகளை ப்ரியாவாரியர் உடைக்க போகிறார் என்பது தெரியவில்லை