ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (21:01 IST)

WorldCup-2023 : ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி...ரோஹித் சர்மா புதிய சாதனை

rohith sharma
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 9வது லீக் ஆட்டத்தில், இந்தியா- ஆஃப்கானிஸ்தான் இடையிலான இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. எனவே 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.

278 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 133 ரன்கள் அடித்தார். உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். (சச்சின் 6 சதம், பாண்டிங், சங்ககாரா  5சதங்கள்)   இதையடுத்து, இஷான் கிஷன் 47 ரன் அடித்தார்.

தற்போது, விராட் கோலி( 55), ஸ்ரேயாஷ் அய்யர்(25) கூட்டணி சேர்ந்து  அணியை வெற்றிபெறச் செய்தனர். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 273  ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஃப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 2 விக்கெட் கைப்பற்றினார்.