1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 29 மார்ச் 2025 (10:13 IST)

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பைத் தந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி சி எஸ் கே அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 236 இன்னிங்ஸ்களில் அவர் 4697 ரன்களை சேர்த்துள்ளார். சுரேஷ் ரெய்னா 176 இன்னிங்ஸ்களில் 4687 ரன்கள் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.