1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Piyush chawla talked about Rohith Sharma qualities

இதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட்டருக்கு அடையாளம்… ரோஹித் ஷர்மாவைப் புகழ்ந்த முன்னாள் வீரர்!

ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் மிகவும் தாக்கம் செலுத்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தலைமையேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஆனால் அவர் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற பிறகு அவரின் ஆட்டத்திறனில் வீழ்ச்சி ஏற்பட்டது. அவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சதமடித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில் இப்போது நடந்துவரும் ஆசியக் கோப்பை தொடரில் மூன்று அரைசதங்களை அடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா “பெரிய மற்றும் நெருக்கடியான தொடர்களில் சிறப்பாக விளையாடுவதுதான் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு அடையாளம். அதற்கு சரியான உதராணமென்றால் நான் ரோஹித் ஷர்மாவைக் கூறுவேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth