1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:38 IST)

விராட் கோலி தனக்காக மட்டும் அதை செய்வதில்லை.. கே எல் ராகுல் சொன்ன சீக்ரெட்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த போட்டியில் கோலி மற்றும் ராகுல் இணை நான்காவது விக்கெட்டுக்கு 233 ரன்கள் ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பில் கோலி அதிகளவில் சிங்கிள்ஸ் மற்றும் டபுல்ஸ்களாக ஓடி எடுத்தனர். இந்திய அணியின் இலக்கில் அவர்கள் சேர்த்த இந்த ரன்கள் பெரியளவில் பங்காற்றின.

விக்கெட்டுக்கு இடையே கோலி மின்னல் வேகத்தில் ஓடுவது பற்றி பேசிய கே எல் ராகுல் “ கோலி, தன்னுடைய ரன்களுக்காக மட்டும் வேகமாக ஓடுவதில்லை. பார்ட்னரின் ரன்களுக்காகவும் வேகமாக ஓடுகிறார். எதிரில் வேகமாக ஓடவைக்க அவர் தூண்டுகிறார்” எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.