நேற்றைய போட்டியில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்த ரோஹித் ஷர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் மிகவும் தாக்கம் செலுத்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தலைமையேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சாதாரணமாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர். அதனால்தான் அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என அன்போடு அழைத்து வருகின்றனர். அதன் பின்னர் ரோஹித் ஷர்மா தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் விஸ்வரூபம் எடுத்தார். மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரராக இருக்கிறார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்தார். இந்த மைல்கல் சாதனையை எட்டும் ஆறாவது இந்திய வீரராக ரோஹித் ஷர்மா உள்ளார்.