1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:18 IST)

“இன்னொரு சச்சின் வரப்போவதில்லை… அதுபோலதான்…” கோலி பற்றி ரவி சாஸ்திரி கமெண்ட்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்த போட்டியில் கோலி இரண்டு சாதனைகளை படைத்தார். இந்த போட்டியில் 97 ரன்கள் சேர்த்த போது கோலி 13000 ரன்களை மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையைக் கடந்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 47 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் கோலியின் சாதனைகள் பற்றி பேசிய போது “இன்னொரு சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் வரமாட்டார். அதுபோலவே கோலி போன்ற இன்னொரு வீரரும் சர்வதேசக் கிரிக்கெட்டில் வரப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.