வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (22:09 IST)

உலகக் கோப்பை டி-20 : இந்திய அணி போராடி தோல்வி

India Pakistan
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி-20 மகளிர் உலகக் கோப்பையில், இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா  போராடித் தோற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 173 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், ஹமன்பிரீட் கவூர் 52 ரன்களும், ஜெமியா  43 ரன்களும், தீப்தி ஷர்மா 20 ரன்களும் அடித்தனர்.

இதில்,20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 167 ரன்கள் மட்டுமே அடித்ததால் போராடி தோற்றது.

எனவே, ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.