ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி:: 4 விக்கெட் இழந்த இந்திய மகளிர் அணி..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடும் இந்திய மகளிர் அணி சற்றுமுன் வரை 11 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 97 ரன் அடித்திருக்கிறது என்பதும் இன்னும் 56 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர் களத்தில் இருந்து வருகிறார் என்பதும் அவர் 33 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டியில் தகுதி வர முடியும் என்பதால் இந்திய வீராங்கனைகள் தீவிர முயற்சி செய்து வெற்றி அடைய முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva