திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2023 (18:14 IST)

உலகக்கோப்பை மகளிர் டி20; டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு..!

women t20 semi
உலகக்கோப்பை மகளிர் டி20; டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு..!
உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்றைய அரையிறுதி போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனைகள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதும் வெற்றிக்காக தீவிரம் முயற்சி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணி இன்று வென்ற அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி வரும் ஞாயிறன்று மாலை 6:30 மணிக்கு கேப்டவுன் நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இன்று அரையறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva