1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mathew hayden wants to help Australian batsmen

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும்… முன்னாள் வீரர் கருத்து!

பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான மேத்யு ஹெய்டன் ‘என்னால் ஆஸி. அணியின் வீரர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆஸி. கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களை அணியிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்யக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

மேத்யு ஹெய்டன் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அடுத்த டெஸ்ட்டில் இடம் கிடைக்குமா?... கே எல் ராகுலுக்கே அது தெரிந்திருக்கும்- தினேஷ் கார்த்திக் கருத்து!