வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (15:50 IST)

அடுத்த டெஸ்ட்டில் இடம் கிடைக்குமா?... கே எல் ராகுலுக்கே அது தெரிந்திருக்கும்- தினேஷ் கார்த்திக் கருத்து!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார். இதனால் அடுத்து நடக்கவுள்ள இந்தூர் டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என சொலல்ப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் “ராகுல் அடுத்த போட்டியில் நீக்கப்படப் போகிறார் என்றால், அது ஒரு இன்னிங்ஸால் அல்ல, கடந்த ஐந்து-ஆறு டெஸ்ட் போட்டிகளில் என்ன நடந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அவர் ஒரு கிளாஸ் பிளேயர். அவர் அனைத்து வடிவங்களிலும் மிகவும் திறமையானவர். இப்போது அவருக்கு விளையாட்டில் இருந்து சிறிது நேரம் தேவைப்படலாம். ஆஸி அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கு புத்துணர்வோடு வரலாம்” எனக் கூறியுள்ளார்.