1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Two important players missing today match pat Cummins announcement

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸி. அணியின் முக்கிய வீரர்கள் விலகல்- கேப்டன் அறிவிப்பு!

இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்க உள்ளது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில் பல மூத்த வீரர்கள் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இன்று போட்டி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் இருந்து ஆஸி அணியின் மூத்த பவுலர் மிட்செல் ஸ்டார்க்கும், அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லும் விளையாட மாட்டார்கள் என கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். அவர்கள் இன்னும் முழுமையான உடல்தகுதியைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

இன்றைய போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் இருக்கிறது.

 
About Writer
vinoth